தமிழகத்தில் அதிமுக தான் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி வரும் மே 2 ம் தேதி 75 மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் திமுக தொகுதி 133 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள பிரபல செய்தி நிறுவனங்களான ரிபப்ளிக் டிவி, இந்தியா டுடே, உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியிட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை கூறியதாவது;
Read more – திமுக சார்பில் இன்று அவசர ஆலோசனை.. மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் தவறாமல் பங்கேற்க உத்தரவு..
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெண்களின் எண்ணங்களை மன எண்ணத்தை செய்தி நிறுவனங்கள் கணிக்க தவறிவிட்டனர். இந்த தேர்தலில் பெரும்பாலான பெண்கள் அதிமுகவிற்கு வாக்களித்துள்ளனர். இதனால் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றார். மேலும், பாஜக போட்டியிட்ட 20 இடங்களில் 10 ல் வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்திற்குள் கால் பதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.