காங்கிரஸ் – திமுக கூட்டணி தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ளதால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்கலங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னை :
திமுக – காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு 3 கட்ட பேச்சுவார்த்தை கடந்தும் இன்னும் இழுபறியில் இருந்து வருகிறது. திமுக தரப்பில் 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும், காங்கிரஸ் தரப்பில் 40 தொகுதிகள் கேட்டு வருவதால் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் அவரச செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் பேசிய தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, தொடர்ந்து திமுக குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை மட்டுமே வழங்க முன்வருவதாகவும், மேலும், தங்களை திமுக நடத்தும் விதம் என்று கூறியபடியே கண்கலங்கியுள்ளார்.
இனி தொகுதி பங்கீட்டில் தான் பங்கேற்கப்போவதில்லை என்றும், பேச்சுவார்த்தை முடிந்து கையெழுத்து போடா மட்டுமே வரப்போவதாகவும் தெரிவித்த அவர், எத்தனை தொகுதிகள் அவரை இனி கேட்கலாம் எனவும் கேள்வி எழுப்பினார். அதில், உறுப்பினர்கள் 30 தொகுதிகள் வரை கேட்கலாம் என்று தெரிவித்துள்ளனர் .
Read more – இரவோடு இரவாக கையெழுத்தான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் : அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள்
மேலும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு சோனியா காந்தியின் பிரதிநிதியாக வந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மூத்த தலைவர்கள் யாரும் வரவேற்கவில்லை என்று ராகுல் காந்திக்கு மெயில் அனுப்பி வருத்தம் தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது.