தமிழகத்தில் புதிய மாவட்டமாக கோவில்பட்டி உதயமாகும் என அமைச்சர் கடம்பூர் ராஜு வாக்குறுதி அளித்துள்ளார்.
கோவில்பட்டி :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் ஆட்சியில் அமர தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ற ஒற்றை முழக்கத்துடன் மக்களின் மனதை கவர புதிய புதிய வாக்குறுதிகளை வேட்பாளர்கள் வழங்கி வருகின்றனர்.
Read more – ரேஷன் அரிசியில் ஆரத்தி எடுத்து அட்டாக் செய்த மக்கள்…. மிரண்டு ஓடிய அதிமுக எம்.எல்.ஏ
தற்போது, கோவில்பட்டி தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கும் கடம்பூர் ராஜு மீண்டும் அதே தொகுதியில் களமிறங்குகிறார். அவருக்கு போட்டியாக அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இதனால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் வேளையில் கடம்பூர் ராஜு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட கடம்பூர் ராஜுஅதிமுக வெற்றி பெற்றால் கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.