இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையில் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை பெற்று ஏர்டெல் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
இந்த வருடம் செப்டம்பர் மாதம் வரையில் ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவை விட அதிக அளவிலான வாடிக்கையாளர்களை பெற்று ஏர்டெல் முன்னணியில் உள்ளது.
மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணயமான ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஏர்டெல் நிறுவனம் ஜியோவை விட அதிக அளவிலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையிலும் அதிக அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. மேலும், வோடோபோன் ஐடியாவும் தனது வாடிக்கயாளர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இழந்திருப்பதாகவும் இந்த அறிக்கையின் மூலம் தெரிகிறது.
READ ALSO- பிராட்பேண்ட் சேவையில் முன்னணியில் ஜியோ!
ஏர்டெல்லின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.17% அதிகரித்து 32.66 கோடியாக உள்ளது. ஜியோ 0.36% பெற்று 40.04 கோடி வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது.