பப்ஜியின் இந்திய வெளியீட்டில் புது திருப்பம் வந்திருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பப்ஜி உள்ளிட்ட பல சீன செயலிகளை ப்ரைவசி காரணம் சொல்லி மத்திய அரசு தடை செய்தது.
இதன் பிறகு மீண்டும் இந்தியாவிற்கு பப்ஜி வரும் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான டீசர் எல்லாம் வெளியானது. ஆனால், எப்போது வெளியாகும் என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் எதுவும் இல்லை.
இந்த நிலையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பப்ஜியின் இந்திய வெளியீடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவில் மீண்டும் பப்ஜி வெளியிடுவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
READ MORE- குறைந்த விலையில் ஆப்பிளின் ஏர்பாட்ஸ்!
பப்ஜி நிறுவனம் சீனாவின் டென்சண்ட் நிறுவனத்துடன் தனது ஒப்பந்தத்தை முடித்து கொண்ட நிலையில், புது அம்சங்களுடன் மீண்டும் இந்தியாவில் வெளியாகும் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.