குறைந்த விலையில் GPS சென்சாருடன் ஸ்மார்ட் வாட்ச்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போட் நிறுவனம் ஒருங்கிணைந்த ஜி.பி.எஸ் சென்சார் உடன் எக்ஸ்ப்ளோரர் என்கிற பெயரின் கீழ் புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையிலான ஆடியோ மற்றும் ஸ்மார்ட் வியரிப்பிள்ஸ்களை தயாரிக்கும் நிறுவனமான போட், இந்தியாவில் மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது, அது போட் எக்ஸ்ப்ளோரர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை உடையவர்களை இலக்காகக் கொண்டுள்ளது, ஏனெனில் அவர்கள் தானே அன்றாட செயல்பாட்டைக் கண்காணிப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருப்பதை அதிகம் விரும்புகிறார்கள்.
boAt எக்ஸ்ப்ளோரரின் விலை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி ரூ.5,990 ஆகும். இருப்பினும், இந்த ஸ்மார்ட்வாட்ச் தற்போது ஒரு வருட உத்தரவாதத்துடன் ரூ.29999 என்கிற அறிமுக விலையில் கிடைக்கிறது. அறிமுக விலை ஏப்ரல் 20 வரை நீடிக்கும், அதன் பிறகு இந்த வாட்ச் அதன் அசல் விற்பனை விலைக்கு மாறும். இந்த வாட்ச் தற்போது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக மூன்று வண்ண விருப்பங்களில் பிட்ச் பிளாக், கிரே மற்றும் ஆரஞ்சு ஃப்யூஷன் வாங்க கிடைக்கிறது:
boAt எக்ஸ்ப்ளோரர் மேக்னட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் ஒரு மெட்டாலிக் உருவாக்கத்தைக் கொண்டுள்ளது. இது 33 மிமீ மாற்றக்கூடிய சிலிகான் ஸ்ட்ராப்களையும் கொண்டுள்ளது. 1.29 இன்ச் அளவிலான டிஸ்ப்ளேவை 5 ஏடிஎம் நீர் எதிர்ப்பு மதிப்பீட்டுடன் கொண்டுள்ளது. இது ப்ளூடூத் 4.2-ஐப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களுடன் இணைகிறது மற்றும் பயனர்களின் லோக்கேஷன் செயல்பாட்டைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த ஜி.பி.எஸ் சென்சாருடன் வருகிறது. வாட்ச் 210 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 30 நாட்கள் காத்திருப்பு நேரத்தையும்,, ஒரே சார்ஜில் 7-10 நாட்கள் பயன்பாட்டை வழங்கும் என்று போட் நிறுவனம் கூறுகிறது.
walking, running, swimming மற்றும் பல என மொத்தம் எட்டு செயல்பாட்டு கண்காணிப்பு முறைகளைக் கொண்டுள்ளது. கால் அலெர்ட், ம்யூசிக் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய இந்த boAt எக்ஸ்ப்ளோரர் ஒரு நேரடி வானிலை முன்னறிவிப்பு அம்சத்துடன் வருகிறது, இது பயனர்களுக்கு நிகழ்நேர வானிலை புதுப்பிப்புகள் மற்றும் அடுத்த மூன்று நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பை வழங்குகிறது. 24 × 7 இதய துடிப்பு மானிட்டர், ஒரு சிறப்பு சுவாச முறை மற்றும் மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பாளருடன் வருகிறது. தவிர இதில் மியூசிக் பிளேபேக் கட்டுப்பாடு, நோட்டிபிக்கேஷன் அல்பெர்ட்ஸ், பைண்ட் மை போன், அலாரங்கள் மற்றும் பல பொதுவான அம்சங்களும் உள்ளன.