வாட்ஸப்பின் புதிய விதிமுறைகள் பயனர்கள் மத்தியில் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸப் இனி பயனர்களின் தகவல்களை சேகரிக்க போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து கடந்த சில நாட்கலுக்கு முன்பு வாட்ஸப்பிடம் இருந்து தகவல் வெளியானது.
புது வருடத்தில் இருந்து இது நடைமுறைப்படுத்த போவதாகவும், இதை அக்செப்ட் செய்தால் மட்டுமே பயனர்கள் இனி வாட்ஸப்பை உபயோகிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் அதை இப்போது வாட்ஸப் செயல்படுத்தியுள்ளது.
READ MORE- குவால்காம் நிறுவனத்தின் புதிய 5ஜி ப்ராசஸர் அறிமுகம்!
பயனர்களின் டேட்டாவுக்கு பாதுகாப்பு இல்லை என வாட்ஸப் பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியும் விவாதமும் எழுந்துள்ளது.
இது குறித்து வாட்ஸப் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம், ‘எங்கள் சேவையை நீங்கள் பயன்படுத்தும் போது அதற்கான டேட்டாவை நாங்கள் பெறுவது அவசியமான ஒன்று. அதை தான் இப்பொழுது நடைமுறை படுத்தியுள்ளோம். பயனர்கள் டேட்டா பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.