வாட்ஸ்ப்பில் பிசினஸ் செயலியில் பயனாளர்கள் இனி ஷாப்பிங் செய்யலாம் எனும் அசத்தல் அப்டேட்டை கொடுத்துள்ளது வாட்ஸப் நிறுவனம்.
பணப்பரிவர்த்தனை, லொகேஷன் பரிமாற்றம் என பல உபயோகமான அப்டேட்டுகளை தொடர்ந்து வாட்ஸப் பிசினஸ் உபயோகிக்கும் பயனாளர்களுக்கு வாட்ஸப் நிறுவனம் இனி ஷாப்பிங் செய்யலாம் எனும் அசத்தல் அப்டேடையும் கொடுத்துள்ளது.
சாட் பகுதியில் கார்ட்ஸ் எனும் பெயருடன் இந்த ஷாப்பிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸப் நிறுவனம். இந்த அப்டேட் படி பயனாளர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு பொருட்களை ஆன்லைன் மூலமாக வாங்க முடியும்.
READ MORE- பழைய ஃபோன்களுக்கு புதிய அப்டேட் கொடுத்த ரியல்மி!
உணவு, ஆடை ஷாப்பிங் போன்ற விஷயங்களையும் இந்த புது அப்டேட்டான கார்ட்ஸ் மூலம் செய்ய முடியும் என்பது கூடுதல் ப்ளஸ். வாட்ஸப் பிசினஸ்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அப்டேட்டானது விரைவில் பிசினஸ் அல்லாத வாட்ஸப்பில்லும் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கலாம்.