வாட்ஸப்பின் வெப் வெர்ஷனில் இனி வீடியோகால் வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸப்பில் மொபைலில் மட்டுமே வீடியோகால் மற்றும் வாய்ஸ் மெசேஜ் வசதிகள் இருந்து வந்தது. வெப் வெர்ஷனில் இது குறித்தான அப்டேட் இல்லாமல் இருந்தது.
அந்த வகையில் தற்போது வெப் வெர்ஷனிலும் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், முதல் கட்ட பரிசோதனை முயற்சியாக இது பீட்டா வெர்ஷனில் பரிசோதிக்கப்படுகிறது.
READ MORE- வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை வழங்கிய வோடோஃபோன் – ஐடியா!
முதற்கட்ட பரிசோதனை வெற்றி பெற்ற பிறகு இந்த வசதி அனைவருக்கும் பரவலாக்கப்படும் எனவும் தெரிகிறது. மொபைல் வாட்ஸப் செயலியில் மட்டுமே இந்த வசதி இருந்த நிலையில், தற்போது வெப் வெர்ஷனிலும் இதற்கான அப்டேட் கிடைத்துள்ளது குறித்து ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.