இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடத்தல் தங்கம்
இலங்கையிலிருந்து மண்டபம் அருகே தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து படகில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுதுறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் மண்டபத்திலிருந்து கடலோர காவல்படைக்குச் சொந்தமான ரோந்துப் படகில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை ரோந்து சென்றனர். மண்டபம் அருகே நடுக்கடலில் ஒரு நாட்டுப் படகினை சோதனை செய்தபோது 9 கிலோ தங்கம் இருந்தது. உடனே படகிலிருந்த 5 மீனவர்களை கைது செய்து கரைக்கு கொண்டு வந்து மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் விசாரித்தனர்.
9 கிலோ
அப்போது, அவர்களிடம் இருந்து சுமார் 9 கிலோ எடையுள்ள சுமார் ரூ. 4.50 கோடி மதிப்பிலான தங்கத்தை அவர்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தங்கத்தை கடத்தி வந்த ஐந்து இளைஞர்களை கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர்.
5 பேர் கைது
விசாரணையில் இலங்கையிலிருந்து தங்கத்தை கடத்தி கொண்டு வந்ததும் கைது செய்யப்பட்ட 5 பேரும் மரைக்காயர் பட்டிணத்தைச் சேர்ந்த முகம்மது ராசிக்,33, ஜைனுல் பயாஸ்கான்,28, பைஸ் அஹமது,28, ஜாசிம் அஹமது,23, முகம்மது பாரூக்,25 என்பது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.