இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அசாம் எல்லையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை திறக்க பூடான் சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூடான் தனது எல்லையை மூடியது.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற முக்கிய காரணங்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க அசாம் மற்றும் பூடான் எல்லை பகுதியில் உள்ள சம்த்ரூப் ஜோங்கர் என்ற இடத்தில் உள்ள தனியார் ஆக்சிஜன் எல்லையை திறக்க இந்திய சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
Read more – கர்நாடகாவில் இன்று முதல் அமலாகும் 14 நாட்கள் முழு ஊரடங்கு… எடியூரப்பாவின் திட்டம் பலிக்குமா ?
இந்த நிலையில் இந்த கோரிக்கையை ஏற்ற பூடான் மன்னர் ஜிக்மே கேசர் அசாம் எல்லையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை திறக்க உத்தரவிட்டுள்ளார். இந்த ஆலை திறப்பதன் மூலம் தினசரி 50 டன் அளவிற்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்று தெரிவித்த பூடான், உற்பத்தி தொடங்கியதும் அதனை வெளியுறவுத்துறைக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.