இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டு கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரிசி, பால், மண்ணெண்ணெய், பெட்ரோல் போன்ற அத்தியாவசிய பொருட்களில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், அங்கு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகிய நிலையில் ராணுவ உதவியுடன் மாலத்தீவு வழியாக சிங்கப்பூருக்கு சென்றதாகவும், அங்கு சில வாரங்கள் தங்கியிருந்து பின் தாய்லாந்திற்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாயின.
இதன்பிறகு, அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையே தனது வழக்கறிஞரின் ஆலோசனைப்படி அடுத்தவாரம் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், கோத்தபய ராஜபக்சவின் மனைவி ஐயோமா ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதால், கோத்தபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்ப நடைமுறைகளை கடந்த மாதம் தொடங்கிவிட்டதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.