அமெரிக்காவின் டிக் டாக் தடை முடிவுக்கு ரஷ்யா எதிர்ப்பு

அமெரிக்காவின் டிக் டாக் தடை முடிவுக்கு ரஷ்யா எதிர்ப்பு
டிக் டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்கா தடை விதித்ததையடுத்து, அமெரிக்காவின் டிக் டாக் தடை முடிவிற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டிக் டாக்கை செயலியை தடை செய்யப்போவதாகவும், வரும் செப்டம்பர் மாதம் மத்தியில் இந்த தடை அமலுக்கு வரும் எனவும் அமெரிக்கா அறிவித்திருந்தது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஸகரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் நியாயமற்ற பொருளாதார போட்டிக்கான அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டு என கூறியுள்ளார்.

மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாகவும், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறுவதாகவும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய அமெரிக்காவிற்கு ரஷ்யா வலியுறுத்தும் என்றும் மரியா ஸகரோவா கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *