கடந்த வருடம் நவம்பர் மாதம் பரவ சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

அனைத்து நாடுகளும் இந்த நோய்க்கு மருந்து கொண்டுபிடிக்க பெரும் முனைப்பு காட்டிவரும் சூழ்நிலையில் இப்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியுள்ளது.
இதில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.33 லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும் சிகிச்சையில் இருக்கும் 64,950 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 1.28 கோடியைக் கடந்துள்ளது.