கொரோனா பரவல் அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பிரபல வைஷ்ணவி தேவி குகைக் கோவிலுக்கான யாத்திரை இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் உள்ள திரிகூட மலைப்பகுதியில் அமைந்துள்ள வைஷ்ணவி கோவிலுக்கான புனித யாத்திரைக்கு கடந்த மார்ச் 18 முதல் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கோவில் வாரியத்தில் தலைமை செயல் அதிகாரி கூறும் போது முதல் வாரத்தில் ஒவ்வொரு நாளும் 2000 பேர் யாத்திரக்கு அனுமதிக்கப்படுவார்கள்.அதில் 100 பேர் வெளிமாநிலத்தவரகள் ஆவர்.ஒரு வாரத்திற்கு பிறகு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.




