பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது தொற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார் .
மருத்துவமனையில் இருந்தவாரே ஒரு காணொளி வெளியிட்டார் அதில் நான் நலமாக உள்ளேன் விரைவில் மீண்டு வருவேன் என்று தெரிவித்தும் இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் அவருடைய உடல்நிலை மோசமான நிலையில் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டார் அங்கு எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை முன்னேற்றம் குறித்த தகவல்களை எஸ்.பி.பி சரண் வீடியோ வெளியீடு மூலம் தெரிவித்து வருகிறார்.
தற்போது 6வது மாடியில் பாடகர் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் அறையில் சிறிய ஸ்பீக்கர்கள் அமைத்துள்ளார்கள் அதில் அவர் பாடிய பாடல்கள் ஒளிபரப்பப்படுகின்றன . பாடல்களை கேட்பதால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வருவார் என இசை ரசிகர்கள் மற்றும் உறவினர்களும்தெரிவித்து வருகின்றனர்.