பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், இன்று காலை 5.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
மணிலாவில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம், மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கியது. 6.4 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவிலிருந்து 451 கி.மீ. தென்கிழக்கில் இருந்ததாகவும், கடலுக்கு மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதாகவும், சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் சில சேதங்கள் காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பீதியடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள மற்ற சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை . சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.