தமிழகத்தில் தற்போது பல்வேறு தரப்பினர் இடையே கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது இதில் பிரபலங்களும் அடங்கும் இந்த நிலையில் கடந்த வாரத்தில் கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . அதன்பின் வந்த தகவல்கள் அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, எம்.பி வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார் மேலும், அவர் விரைந்து நலம் பெற வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் ,ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சியை சார்ந்தவர்களும் வசந்தகுமார் விரைந்து மீண்டு வர வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை வசந்த குமார் நலமுடன் உள்ளார் என மகன் விஜய் வசந்த் கூறியுள்ளார். அப்பாவுக்கு எந்த அறிகுறியும் தென் படாமலேயே கொரோனா தொற்று ஏற்பட்டது என்றும் பரிசோதனை நடந்து அதன் முடிவு வந்த பின்னர் தான் அவருக்கு அப்படி ஒரு பாதிப்பு இருப்பதே எங்களுக்கு தெரிய வந்தது என்றும் தெரிவித்தார். மேலும் அதுவரை காய்ச்சல், தொண்டைவலி, மூச்சுத்திணறல் ,சளி,போன்ற எந்தவிதமான அறிகுறியும் அவருக்கு தென்படவில்லை என்றும் கூறிய விஜய் வசந்த், மருத்துவமனையில் அனுமதித்த பின்னரே திடீரென்று அப்பாவுக்கு ஆக்ஸிஜன் அளவு குறைவு ஏற்பட்டது என்றும் தற்போது ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் பெற்று வருகிறார் விரைவில் நலமுடன் திரும்புவார் என்று அவர் தெரிவித்தார் .