பாயாசங்களில் மிகவும் சுவையானப் பாயாசம் என்று சொல்லப்படும் அடை பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க…

பாயாசம்னாலே சுவை தான்.அதிலும் அடை பாயாசம்னா அது வேற லெவல்-னே சொல்லலாம். கேரள மாநிலத்தில் அடை பிரதமன் இல்லாத விசேஷ வீடுகளே இல்லைனு சொல்ற அளவுக்கு, இது ரொம்ப ஃபேமஸ். கேரளாவில இதை அடை பிரதமன்-னு தான் சொல்லுவாங்க. இத சாப்பிட நம்ம ஒன்னும் கேரளா போகனும்னு அவசியம் கிடையாது. நம்ம வீட்லயே ஈசியா செஞ்சுடலாம். வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்…

தேவையான பொருள்கள்
- அடை – 100 கிராம்
- வெல்லம் – 200 கிராம்
- தேங்காய் பால் – 3 கப்
- ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
- தேங்காய் (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு
- முந்திரி பருப்பு – 10
- காய்ந்த திராட்சை – 10
- நெய் – 2 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை
- அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அது கொதித்ததும், அதில் அடையைப் போட்டு, 15 நிமிடங்கள் வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.
- நன்றாக வெந்ததும் தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் அலச வேண்டும் 2-3 முறை அலசிக்கொள்ள வேண்டும். அப்போது தான், அடை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
- பிறகு, 1 கப் தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் வெள்ளம் சேர்த்து பாகு காய்ச்சி, வடிகட்டி அழுக்கை நீக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.
- இப்போது, அலசி வைத்துள்ள அடை, காய்ச்சி வைத்துள்ள பாகு இரண்டையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து, பாகு வற்றும் வரை நன்றாகக் கொதிக்க விடவும்.
- பிரெஷ்-ஆக எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- பின்பு, ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை மற்றும் பொடியாக நறுக்கி வைத்துள்ள தேங்காய் சேர்த்து தனித்தனியாக பொன்னிறமாகும் வரை வறுத்தெடுத்து, அடை பாயாசத்தில் கலக்கவும்.
- கடைசியாக ஏலக்காய் பொடி தூவி, கலந்து சூடாக பறிமாறவும்.
சுவையான அடை பாயாசம் ரெடி!!




