ரபேல் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் அரசு கஜானாவில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டிடமிருந்து இந்திய விமானப்படைக்கு சுமார் ரூ.59 ஆயிரம் கோடி செலவில் 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, நான்கு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இதில், முதல் கட்டமாக, ஐந்து ரபேல் விமானங்கள், பிரான்சில் இருந்து கடந்த மாதம் இந்தியா வந்தடைந்தது.
இது தொடர்பாக ராகுல்காந்தி தனது டுவிட்டரில் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார் அதில் அவர் கூறியதாவது:
மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் ரபேல் ஒப்பந்த விவரம் பற்றிய தகவல் எதுவும் இடம்பெறவில்லை. தகவல்களை ராணுவ அமைச்சகம் வழங்க மறுத்துவிட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது என்றும் இதன் மூலம், ரபேல் போர் விமானம் வாங்கிய விவகாரத்தில் அரசு கஜானாவில் இருந்து பணம் திருடப்பட்டு உள்ளது. எனவும் ராகுல் டுவிட் செய்துள்ளார்.