இந்தியாவில் இன்று மேலும் 60975 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இன்று ஒரு நாளில் இந்தியாவில் 60975 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது , நாட்டில் கடந்த மணி நேரத்தில் 60975 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,67,324 ஆக உயர்ந்துள்ளது .
நோய்த்தொற்றால் 7,04,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்,நேற்று மொத்தம் 66,550 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், 848 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 24,04,585 எனவும் பலியானோர் எண்ணிக்கை 58,390 எனவும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரு நாளில் மாதிரிகள் 9,25,383 பரிசோதிக்கப்பட்டன , இதுவரை இந்தியாவில் மொத்தம் 3,68,27,520 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு இதுவரை மருந்தோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 75.27 சதவிகிதம் பேர் மீண்டு உள்ளனர் என்பது மிகவும் ஆறுதலான விஷயமாகவே கருதப்படுகிறது.




