ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபேட் மாடலை வடிவமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உலக அளவில் தரம் என்பதற்கு அடையாளமாய் மாறியுள்ளது ஆப்பிள் நிறுவனம். வாடிக்கையாளர்களுக்கு என பார்த்து, பார்த்து தனது ஒவ்வொரு தொழில்நுட்ப உபகரணங்களையும் மெருகேற்றி அறிமுப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் மலிவான விலையில் புதிய ஐபேட் ஏர் வெர்ஷனை வடிவமைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதனை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஐபேட் ஏர் வெர்ஷன் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்தை குறைந்த விலையில் வழங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஐபோன் எஸ்இ 2020 மாடலில் பின்பற்றப்பட்டதை போன்ற யுக்தியாக இருக்கும் என கூறப்படுகிறது. 2020 ஐபேட் ஏர் மாடல் 10.8 இன்ச் ஸ்கிரீன், ஏ13 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபேட் ஏர் விலை 500 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 37,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.