மணம் கமழும் பாடி வாஷ் – இனி அதிக பணம் கொடுத்து வாங்கத் தேவையில்லை
ரசாயனங்கள் கலந்த சோப்பை விடுத்து இயற்கையான மணம் கமழும் பாடி வாஷை வீட்டிலேயே தயாரிக்கலாம். சருமம் உலர்ந்து போகாமல் மிருதுவாக இருக்கும்.

வாசனையற்ற திரவ காஸ்டில் சோப் – 2/3 கப்
தேன் – 1 ஸ்பூன்
கிளிசரின் – 2 டீஸ்பூன்ஜோஜோபா எண்ணெய் – 2 டேபில் ஸ்பூன்
டீ ட்ரீ ஆயில் – 5 சொட்டு
லாவண்டர் வாசனை எண்ணெய் – 5 சொட்டு
பாடி வாஷ் நிரப்பும் பாத்திரம் – 1
குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் அந்த பாத்திரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துக்கொண்டு பின் அதை நன்கு குலுக்குங்கள். பாடி வாஷ் தயார்.
மிகவும் வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு:
வாசனையற்ற திரவ காஸ்டில் சோப் 1/2 கப், தேன் 1/2 கப், ஏதேனும் வாசனை திரவியம் 10 சொட்டு, ஆலிவ் எண்ணெய் 2 டேபில் ஸ்பூன், ஆமணக்கு எண்ணெய் 2 டேபில் ஸ்பூன் என அனைத்தையும் மேலே குறிப்பிட்டது போல் குலுக்கி பாத்திரத்தில் அடைத்துப் பயன்படுத்தலாம்.




