ஹாங்காங்கை சேர்ந்த 30 வயது ஆண் ஒருவர் நான்கு மாதங்களுக்கு முன்னால் கொரோனாதொற்று ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளானார் பின்பு அதில் இருந்து குணமடைந்தார்.ஆனால், தற்போது அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனை ஹாங்காங் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் உடம்பில் இந்த முறை தொற்று ஏற்பட காரணமான வைரஸ் -ன் மரபணுவை ஹாங்காங் பல்கலைக்கழகம் ஆய்வு செய்துள்ளார்கள்.இதில் முதன்முறை தோற்று ஏற்படுத்தியவைக்கும் தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் இருக்கும் மரபணுக்களில் மாற்றங்கள் நிலவுவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எனினும் கொரோனா தொற்று தாக்குதல் இரண்டாம் முறையும் ஏற்படுவது பெரிய அதிசயம் மற்றும் அபூர்வமான ஒன்று என மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு கொரோனா வுக்கு எதிரான எதிர்ப்புசக்தி இருக்கும் என்றே நம்பப்பட்டு இருந்தது. ஆனால் அது எத்தனை காலம் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று உறுதி இட்டு இதுவரை எந்த நாடும் அறிவிக்கவில்லை. எனினும் ,மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை அந்த எதிர்ப்பு சக்தி உடலில் நிறைந்திருக்கும் என்று நம்பப்பட்டது. அதன்பின் படிப்படியாக குறையத் தொடங்கலாம் என்றும் கூறப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று தன்னுடைய மரபணுவில் மாற்றம் செய்து கொண்டு வருவதால் ஆண்டிற்கு ஒரு முறை தடுப்பூசி நாம் போட்டுக் கொள்ளும் நிலை வரும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
சென்னையிலும் இதைப்போன்றே ஒரு சில நபர்களுக்கு இருமுறை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சில வாரங்களுக்கு முன் கூறியிருந்தார்.
பி சி ஆர் பரிசோதனையில், வைரஸ்-ன் இறந்த செல்கள் உடலில் தென்பட்டாலும், பாசிடிவ் என காட்டும் சூழ்நிலை நிலவுவதால்,இரண்டாவது முறை தொற்று ஏற்பட்டதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் மற்றும் தகவல் இதுவரை இல்லை. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதன் மூலம் இயற்கைதான எதிர்ப்பு சக்தி அமைந்தாலும் கூட மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு அமைந்துள்ளதாகவே தெரிகின்றது.
எனவே, ஒருமுறை தொற்று ஏற்பட்டிருந்தாலும் சமூக இடைவெளி, முகக் கவசம்அணிதல் போன்ற அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.