இறுதி செமஸ்டர் தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்ததான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். எனவே மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக இருங்கள் என்று, அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என்று என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பையடுத்து, தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்ததான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும், என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நடத்தப்படலாம் என்றும், அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது என்றும், அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
எனவே, மாணவர்கள் அனைவரும் தேர்வுக்குத் தயாராக இருங்கள். விரைவில் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.