பிக் பாஸ் புகழ் முகேன் ராவ் விரைவில் தமிழ்ப் படத்தில் அறிமுகம் : இயக்குனர், கதாநாயகி யார் யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3ஆம் பாகத்தில் கலந்து கொண்டு வெற்றி பட்டவர் முகேன் ராவ். மலேசிய தமிழரான இவர், சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தார். தற்போது இந்த கனவு நனவாகியிருக்கிறது. வெப்பம் பட புகழ் அஞ்சனா அலி கான் இயக்கும் படத்தில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக திவ்யபாரதி நடிக்கிறார். இவர் ஜி.வி.பிரகாஷின் பேச்சிலர் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முகேனுடன் பங்கேற்ற லோஸ்லியாவுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் நடிக்கும் படத்தில் நாயகி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பது இவர்கள் மூலம் மீண்டும் தெரியவந்திருக்கிறது.