ஜப்பான் பிரதமராக உள்ள ஷின்சோ அபே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சில ஆண்டுகளாக குடல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதனிடையே, கடந்த சில வாரங்களாகவே அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் பரவி வந்தன. சமீபத்தில் இரண்டு முறை அவர் மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், வழக்கமான சிகிச்சை எனவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ஜப்பான் அரசு தொலைக்காட்சியான என்.ஹெச்.கே வெளியிட்டுள்ள செய்தியில், ‛தனது நோய் மோசமடைந்துள்ளதால் அபே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், கொரோனா பெருந்தோற்று சுழலில் நாட்டை வழிநடத்துவதில் இது சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர் கவலைப்படுகிறார் எனவும் குறிப்பிடபட்டுள்ளது.
ஜப்பானில் அரசியல் குடும்பத்தில் பிறந்த, 65 வயதான ஷின்சோ அபே 2012ல் இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்ற பின், அந்நாட்டில் நீண்டகாலமாக பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு உரியவரானார். முன்னதாக கடந்த 2007ம் ஆண்டு உடல் உபாதை காரணமாக தான் வகித்து வந்த பிரதமர் பதவியை அபே ராஜினாமா குறிப்பிடத்தக்கது.