சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி உலகையே ஆட்டி படைத்து வருகிறது.
இந்த நோயின் தாக்கத்தால் உலகமே முடங்கிப்போயுள்ளது, இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அனைத்து நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன, இந்தியா தடுப்பூசியை மனிதர்கள் மேல் சோதனை செய்யும் முறையை தொடங்கிவிட்டது இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி கிடைத்து விடும் என ICMR தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆனாலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 53 லட்சத்தை கடந்துள்ளது.
தற்போது இருக்கும் நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 53 லட்சத்து 78 ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.
சற்று ஆறுதல் தரும் விதமாக வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 77 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனால் கொரோனாவால் இதுவரை 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் பட்டியல் வருமாறு :
அமெரிக்கா – 61,73,229
பிரேசில் – 38,62,311
இந்தியா – 35,42,733
ரஷியா – 9,90,326
தென் ஆப்பிரிக்கா – 6,25,056