நம் முன்னாள் குடியரசு தலைவரின் உடல் புது டெல்லியில் அரசு மரியாதையுடன் தகனம்.
பிரணாப் முகர்ஜி எனும் இவரை தெரியாத ஒரு இந்தியர் இங்கு இருக்கமுடியாது. இவர் நம் முன்னாள் குடியரசு தலைவர். இவரின் உடலானது புது டெல்லியில் உள்ள தில்லி லோதி எனும் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நிலை குறைப்பாட்டால் ராணுவ மருத்துவமனயில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்தார். அவரின் இறப்பிர்க்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். மேலும், புது தில்லியில், 10, ராஜாஜி மார்க்கில் உள்ள இல்லத்தில் பிரணாப் முகர்ஜியின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலானது அவரின் வீட்டிலிருந்து 1 மணி அளவில் எடுக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் தில்லி லோதியில் ஊர்வளமாக கொண்டு செல்லப்பட்டது. மதியம் 2 மணியளவில் அவரது உடலானது முழு அரசு மரியாதையுடன் உடல் எரியூட்டப்பட்டது. அதுமட்டுபின்றி அவருக்கு கொரொனா தொற்று இருந்ததால் அவரது உடல் கரோனா சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.