எத்தகைய சூழலிலும் தனது படையை காக்கும் திறன் கொண்ட வீரனே சிறந்த தலைவன் ஆகிறான்.. இதற்கு வரலாறு பல சான்றுகளையும் நமக்கு அளித்துள்ளது.
மகாபாரதத்தில் கிளையின் மீதுள்ள கிளி தெரிகிறதா என்று கேட்டபோது, அநாவசியமான சிறகுகளோ, சருகுகளோ தெரியாமல், எனது இலக்கான கிளியின் கண் தெரிகிறது என்று கூறிய அர்ஜுனன் தான் காலங்கள் கடந்தும் இன்று வரை சிறந்த வீரனாக போற்றப்படுகிறான்.
அதே பாணியில் தான், தனது அரசியல் வாழ்வில் எத்தனை இடையூறுகள் தன் முன் தோன்றினாலும், வெற்றி என்கிற ஒரே இலக்கை நோக்கி தனது கவனத்தை சிதறவிடாமல் உழைக்கும் வழக்கம் கொண்டவர் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.,
தேவையற்ற கேள்விகள் எத்தனையோ தன்னை நோக்கி வந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் நச்சென நான்கு வார்த்தைகளில் பதிலளித்து தனக்கான பணி என்னவோ அதன் மீது கவனத்தை செலுத்துபவர் ஓ.பி.எஸ்.,
எப்போதும் தன் மீது புகழ் வெளிச்சம் இருக்க வேண்டும் என்பதற்காக, சிறு பிரச்னைகளில் எல்லாம் மூக்கை நுழைத்து அலம்பல் செய்யும் அரசியல்வாதிகள் போல் இல்லாததே ஓ.பி.எஸ்., கொண்டுள்ள தனிச்சிறப்பு.
இதோ, கொரோனா ஊரடங்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எதிர்வரும் தேர்தலை வீரனாய், சிறந்த தலைவனாய் நின்று எதிர்கொள்ள தயாராகிவிட்டார் ஓ.பி.எஸ்.,
அரசியல் சதுரங்கத்தில் வெட்டி வீழ்த்த வேண்டிய காய்களை குறிவைத்து, ராஜாவை காப்பதற்கான பணிகளை தொடங்கி விட்டார் அரசியல் சூட்சமம் அறிந்த நிஜத் தளபதி.
வெற்றியை இலக்காக கொண்டு தனது சதுரங்க ஆட்டத்தை தொடங்கியுள்ள ஓ.பி.எஸ் அவர்களுக்கு உறுதுணையாய், அவருக்கு பின்னால் அ.தி.மு.க சிப்பாய்கள் அணிவகுக்க தொடங்கி விட்டனர்.