இன்று புதன் கிழமை தேதி 02.09.2020, ராகுகாலம் பிற்பகல் 12.00-1.30, எமகண்டம் காலை 7.30-9.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்
இன்று மொத்தத்தில் நல்ல நாளாக இருக்கும். உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்ள சிறந்த நாளாகும், இன்று நட்பு வட்டம் பெருகும்.
ரிஷபம்
இன்று சாதகமான பலன்கள் காண்பீர்கள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி தரும் மாற்றங்கள் நிகழும். நீங்கள் உங்கள் பலத்தை உணர்வீர்கள். இதனால் வெற்றி காண்பீர்கள் .
மிதுனம்
இன்று உங்களுக்கு எதிர்மறையான சிந்தனை உருவாகலாம். இன்று மன அமைதியுடன் இருந்தால் மகிழ்ச்சி ஏற்படும். அனைவரையும் அனுசரித்து விவேகத்துடன் நடந்து கொள்வது நன்மை பயக்கும்.
கடகம்
நீங்கள் வருத்தம் படும் வகையில் சில குழப்பங்கள் எதிர் கொள்ள நேரிடலாம் இன்று சராசரியை விட சற்று சிறப்பாக காணப்படும் நாளாகும், தெய்வ வழிபாட்டின் மூலம் வெற்றி காணும் நாள்
சிம்மம்
இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். நீங்கள் உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள். புதிய நட்புவட்டம் பெருகும்.உங்கள் உடன் பிறந்தவர்களுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள்.
கன்னி
நீங்கள் ஏற்ற இறக்கங்களை சமமாக இருக்க கூடிய நாள். ஆனால் இன்று விரைந்து முடிவு எடுப்பீர்கள். நீங்கள் உறுதியுடன் செயல்படுவீர்கள்.
துலாம்
இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் செயல்களை திட்டமிட்டு மேற்கொள்வீர்கள். இன்று நீங்கள் பல முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.பணியிடச் சூழல் அதற்கு அனுகூலமாக இருக்கும். பணியில் வெற்றி காண்பதற்கான மன உறுதி உங்களிடம் இருக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு சற்று சிரமமான நாளாக இருக்கும். உங்கள் அணுகுமுறையில் உறுதி தேவை.
இன்று நிதி நிலைமை சற்று தொய்வாக இருக்கலாம். நீங்கள் ஒவ்வொரு ரூபாயையும் பார்த்து பார்த்து செலவு செய்ய வேண்டும்.
தனுசு
இன்று சற்று அதிர்ஷ்டம் இருக்கும் நாள். இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் உங்களுக்கு பயமான மனநிலை ஏற்படலாம்.நல்ல பலன் பெற உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியமாகும்.
மகரம்
இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் திறமை மூலம் நீங்கள் பல வெற்றிகளை காண்பீர்கள். நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அது உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். சேமிப்பை சிறப்பாக பராமரிக்கும் நிலையில் இருப்பீர்கள்.
கும்பம்
இன்று தேவையற்ற கவலைகள் உங்கள் வளர்ச்சியை தடுக்கும்.நிதிநிலைமை ஏற்றத்தாழ்வுடன் காணப்படும். கையில் இருக்கும் காசு தண்ணி போல் செலவாக வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
மீனம்
இன்று சிறிது மந்தமான நாள். சவால்களை எதிர்கொள்ள தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். உற்சாகமாக இருப்பது நல்லது.மன அமைதியின்மை காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.