ஊரடங்கு தளர்வினால் சில விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.

சென்னையில் பல நூற்றாண்டுகளாக தீர்க்க முடியாத ஒரு பிரச்சனை பொதுஇடத்தில் எச்சில் துப்புவது. இதௌ குறித்து அரசி எத்தனை கட்டுபாடுகள் கொண்டுவந்தாலும் சில குடிமகங்களையோ, இல்லை சில படித்த முட்டாள்களையியோ நம்மால் திருத்தவே முடியாது.
பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் என்று எடுத்துரைத்தாலும் இதிவரி அது நடைமுறை படுத்தவில்லை என்பதுதான் உண்மை.
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கொரனோவை தடுக்க சென்னை பெருநகர மாநகராட்சி மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் மற்றும் புதிய யுத்திகள் குறித்து தெரிவித்தார். அத்துடன், கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். அதுமட்டுமின்றி, இவ்வாறு செய்பவர்ளுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறினார்.




