தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட காதலன் மீது, பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
கர்னூல் மாவட்டம் பெத்த கோட்லா கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரா – சுப்ரியா எனும் இருவர் 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நாகேந்திராவின் பெற்றோர், கடந்த மாதம் லட்சுமி எனும் வேறொரு பெண்ணுடன் அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், காதலனின் திருமணம் தொடர்பான தகவல் அறிந்து ஆத்திரமடைந்த சுப்ரியா, இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகேந்திரா மீது ஆசிட்டை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் முகம், கை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயமடைந்த நாகேந்திரா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, நாகேந்திரன் அளித்துள்ள புகாரில், காதலை முறித்துக் கொள்வது தொடர்பாக சுப்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் சம்மதம் தெரிவித்த பிறகே தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதற்காக சுப்ரியா தன்னிடம் பணம் பெற்றத்தாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய ஒன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.