எக்குவடோர் நாட்டைச் சேர்ந்த ஜூலியோ மோரா (110 வயது), வால்டராமினா குயின்டராஸ் (104) என்ற தம்பதி உலகின் மிக மூத்த தம்பதி என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
1,2 வருடங்கள் கூட தாக்கு பிடிக்க முடியாத இக்கால தம்பதிகளின் மத்தியில் 79 ஆண்டுகள் ஆகியும் ஒற்றுமையாக அழகாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு பெற்றோர் ஒப்புக் கொள்ளாததால், ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன், தெளிவாக இருக்கிறார்கள். சற்றே மன வருத்தம் இருக்கிறதாம். இந்த கொரோனா காலத்தில் தங்கள் குடுமத்தினர் அனைவரையும் அடிக்கடி ஒன்றாய்க் காண முடிவதில்லை என்று. இவ்வாறு அவர்களது மகள் சிசிலியா (Cecilia) கூறுகிறார்
மோரா 1910ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி பிறந்தவர். குயின்டராஸ் 1915 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி பிறந்தவர். இருவரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி 1941ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஸ்பெயின் நாட்டவரால் குய்ட்டோ பகுதியில் கட்டப்பட்ட முதல் தேவாலயமான லா இக்லேசியா டெ எல் பெலன்(La Iglesia de El Belen ) ல் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெற்ற ஆசிரியர்களான இவர்கள், எக்குவடோர் நாட்டின் தலைநகர் குய்ட்டோ வில் வாழ்ந்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது.