முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை:
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.இதில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் அதற்கேற்ப மருத்துவ வசதிகளை மேலும் அதிகரித்தல்,ஊரடங்கு தளர்வுகளால் கொரோனா அதிகரித்தால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.




