மதுரை மாணவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து, நீட் தேர்வு தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:
நீட் தேர்வின் தொடர் தற்கொலை குறித்து தி.மு,க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வு பயத்தின் காரணமாக மதுரை மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது.தற்கொலைக்கு முன் மாணவி பேசிய ஆடியோ நீட் தேர்வின் கோரமுகத்தைக் கொடூரமாய் வெளி காட்டுகிறது. ஒரு தேர்வு, மாணவர் மனங்களை நிலைகுலைய வைப்பதை அனிதா முதல் ஜோதிஸ்ரீதுர்கா மரணம் வரை உணர முடிகிறது.
தற்கொலை என்பது தீர்வல்ல, நீட் என்பது ஒரு தேர்வே அல்ல என்று அவர் கூறியுள்ளார்.




