Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

இந்தி தெரியாது போடா” டி-ஷர்ட்டுகளுக்கு திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்…

September 13, 2020
‘I am a தமிழ் பேசும் indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களுக்கு திருப்பூரில் ஆர்டர்கள் குவிந்து வருகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் ‘I am a தமிழ் பேசும் indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டது சமீபத்தில் வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பின்னலாடை தலைநகரமான திருப்பூரில் இந்த டி-ஷர்ட்டுகளுக்கான ஆர்டர்கள் அதிகரித்து வருகின்றன.

தமிழக எம்.பி.க்களுக்கு இந்தியில் பதில் கடிதம் எழுதுவது மத்திய அரசின் மொழிவெறிப் போக்கு… மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…

நீட் தேர்வு மையங்களில் தமிழ் புறக்கணிப்பு – இந்தி மற்றும் ஆங்கிலம் முன்னுரிமை..

“தீ”-ஷர்ட் வசனம்.. ட்விட்டரில் வேலையை காட்டிய தமிழர்கள்..திமுக காரணமா?

முதன்முதலாக இந்த டி-ஷர்ட்டை தயாரித்த பின்னலாடை நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன், கடந்த நான்கு நாட்களில் மட்டுமே பத்தாயிரம் டி-ஷர்ட்டுகளை தயாரித்து அனுப்பியுள்ளதாக தனியார் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

“கடந்த 5 வருடங்களாக திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறேன். திராவிட முன்னேற்றக் கழக – மாணவர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருக்கிறேன். ‘திராவிட சிறகுகள்’ என்ற அமைப்பையும் உருவாக்கி நடத்தி வருகிறேன். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தி மொழி திணிப்பு பிரச்சனைக்கு எதிராக இன்றைய இளைஞர்கள் ‘I am a தமிழ் பேசும் indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளை அணிந்து போராடி வருகின்றனர். அதை நாங்கள் தயாரித்து வழங்குவது பெருமையளிக்கிறது” என கூறுகிறார் கார்த்திகேயன்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் விருப்பத்திற்கினங்க இந்த டி-ஷர்ட்டுகளை இவர் சென்ற மாதம் தயாரித்து வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் அலுவலகத்திலிருந்து இந்த டி-ஷர்ட்டுகளை தயாரிப்பதற்கான ஆர்டர்கள் முதலில் வந்தன. இந்தி எதிர்ப்பு வாசகங்களின் வடிவங்களை அவர்கள் அனுப்பி வைத்தனர். அதை டி-ஷர்ட்டுகளில் அச்சடித்து அனுப்பினோம், அடுத்த சில நாட்களில் இவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

‘I am a தமிழ் பேசும் indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை தயாரித்து தருமாறு ஏராளமான ஆர்டர்கள் எங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. வாசகத்தின் வடிவத்தை பயன்படுத்துவதற்கான உரிய அனுமதியை பெற்று தயாரிப்பு பணிகளை தொடங்கினோம். இந்தி மொழியை திணிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு எதிரான தமிழர்களின் குரல் வடிவமாக இந்த டி-ஷர்ட்டுகள் தற்போது மாறியுள்ளன.

கடந்த நான்கு நாட்களில் மட்டுமே பத்தாயிரம் டி-ஷர்ட்டுகளை தயாரித்து உலகெங்கும் அனுப்பியுள்ளோம்” என தெரிவிக்கிறார் இவர். கடந்த சனிக்கிழமை அன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ‘I am a தமிழ் பேசும் indian’ என்று அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டையும், மெட்ரோ படத்தில் நடித்த நடிகர் சிரீஷ் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டையும் அணிந்து, அந்த புகைப்படங்களை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.

இதனை பாராட்டியதோடு, இதேபோன்ற டி-ஷர்ட்டுகளை அணிந்த இளைஞர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட படத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

“எந்த மொழியையும் கற்றுக்கொள்வதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. ஆனால், ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதைதான் நாம் ஆண்டாண்டு காலமாக எதிர்த்து வருகிறோம். அந்த எதிர்ப்பின் நவீன வடிவம் தான் இந்த டி-ஷர்ட்டுகள். தமிழகம் மட்டுமின்றி தெலங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிஷா ஆகிய மாநிலங்களிலிருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளது. குறிப்பாக, இந்தி எதிர்ப்பு டி-ஷர்ட்டுகள் பிரபலமடைந்த அடுத்த நாளிலிருந்து குஜராத் மாநிலத்தில் இருந்து ஆர்டர்கள் வந்தது.

இந்திய மாநிலங்கள் மட்டுமின்றி அமெரிக்கா, குவைத் மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்து இந்த டி-ஷர்ட்டுகளுக்கான ஆர்டர்கள் வந்துள்ளன” என்கிறார் கார்த்திகேயன்.

யுவன் சங்கர் ராஜா மற்றும் கனிமொழியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திமுக-வின் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சாந்தனு பாக்கியராஜ், மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர் சுந்தரராஜன் என பல்வேறு தரப்பினரும், ‘I am a தமிழ் பேசும் indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

“இந்தி மொழிக்கு எதிராக பேசிவிட்டு, இந்தி பேசுபவர்களை வைத்து தானே டி-ஷர்ட் தயாரிக்கிறாய் என சிலர் கேட்கின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 பணியாளர்களை வைத்து தான் இந்த டி-ஷர்ட்டுகளை தயாரிக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். தினமும் ஆயிரக்கணக்கான ஆர்டர்கள் வந்து குவிகின்றன. முடிந்தவரை அனைவருக்கும் தபால் மூலம் அனுப்பி வருகிறோம். புதிய ஆர்டர்களாக சுமார் 2000 குறுந்தகவல்கள் வந்துள்ளன. இன்னும் அவற்றை படிக்க முடியவில்லை. நாங்கள் எதிர்பார்க்காத அளவில் ஆர்டர்கள் வந்து குவிகின்றன.

அதேநேரத்தில், சிலர் கைப்பேசியில் அழைத்து தகாத வார்த்தைகளில் திட்டுகின்றனர், அசிங்கமாக பேசுகின்றனர். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இந்தி எதிர்ப்புக்கான டி-ஷர்ட்டுகளை அயராமல் தயாரித்து வருகிறோம்.” என்கிறார் பின்னலாடை நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன்.

இந்த குறிப்பிட்ட வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளுக்கான ஆர்டர்கள் அதிகரித்து வருவதால் திருப்பூரில் இயங்கி வரும் மற்ற பின்னலாடை நிறுவனத்தினரும், இவரிடமிருந்து வடிவங்களை பெற்று தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ளனர்.

தபால் செலவு உட்பட இந்த டி-ஷர்ட்டுகளுக்கு ரூ.200 முதல் ரூ.400 வரையாக விலை நிர்ணயிக்கப்பட்டு திருப்பூரிலிருந்து விற்பனை செய்யப்படுகிறது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இன்று நடக்கிறது Neet தேர்வு…

Next Post

நாளை மறுதினம் முதல் துணைத்தேர்வுக்கு ‘ஹால்டிக்கெட்’ பதிவிறக்கம் செய்யலாம்-அரசு தேர்வுத்துறை

Next Post

நாளை மறுதினம் முதல் துணைத்தேர்வுக்கு ‘ஹால்டிக்கெட்’ பதிவிறக்கம் செய்யலாம்-அரசு தேர்வுத்துறை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version