ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மாலா ராய் அவர்கள் ஊரடங்கின் போது புலம்பெயர் தொழிலாளிகளை காப்பாற்றவும் அவர்களை பாதுகாப்பாக அவர்களின் ஊருக்கு திருப்பி அனுப்பவும் என்ன செய்தது மதிய அரசு என எழுத்துபூர்வமான கேள்வியை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் புலம்பெயர்ந்தோர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்வதற்கு முக்கிய காரணம் போலி செய்திகள்தான் என்று கூறிகிறார். ஊரடங்கு பற்றிய போலி செய்திகளும் வதந்திகளும் தான் அவர்களை இப்படி புலம்பெயர செய்தது.
ஆயினும் அவர்கள் உணவு,இடம்,தண்ணிர் இன்றி கஷ்டப்பட கூடாது என அவர்களுக்கு தேவையானவற்றை மத்திய அரசு செய்தது என கூறியுள்ளார்.




