புதுச்சேரியில் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் இன்று முதலமைச்சர் வீட்டின் முற்றுகையில் பல அரசு ஊழியர்கள் சேர்ந்து புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில், தற்காலிக(வவுச்சர்) ஊழியர்களாக பணிபுரிந்து வரும் 1,311 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, தினக்கூலி ஊழியர்களாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என கூறி வவுச்சர் ஊழியர்கள் 50 பேர் புதுச்சேரியின் முதலமைச்சரான நாராயணசாமி வீட்டின் முற்றுகையில் போராட்டம் நடத்தியுள்ளனர்,
அதனால் அங்கு போலீசார்கள் வரவழிக்கப்ட்டு அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது அவர்களை கட்டுப்படுத்த முயலாததால் அவர்களை கைது செய்தனர். அதுமட்டுமின்றி அங்கு போலீசாருக்கும் பணியாளர்களுக்கும் தள்ளு முள்ளு பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.