சைக்கிள் என்பது முந்தைய காலத்தில் எல்லோரிடமும் சாதாரணமாக எல்லோரிடமும் இருக்கும் ஒரு பொருளாக இருந்தது. ஆனால் இப்போது நம் தாத்தாக்கள் சிலபேர் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் அபூர்வமான ஒரு பொருளாக மாறி விட்டது.
இளம் தலைமுறையினர் எல்லாம் பைக், கார் என்று வாங்கிவிட்டு சைக்கிள் என்று ஒன்று இருப்பதையே மறந்துவிட்டார்கள். ஆனால் சைக்கிள் ஓட்டுவதால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்..
கொழுப்பைக் குறைக்க
தினமும் அரை மணி நேரம் சைக்கிள் மிதிப்பதனால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும். அதோபோல் உடல் எடையைக் குறைப்பதற்கும் சைக்கிள் மிதிப்பது உதவுகிறது..
ஜீரண சக்தியை அதிகரிக்கும்
நாம் தொடர்ச்சியாக சைக்கிள் மிதிப்பதனால், அது நம் உடலில் ஜீரண சக்தியை அதிகரித்து, நம் ஜீரண மண்டலத்தை சீராக இயங்க வைக்க உதவுகிறது.
ரத்த அழுத்தம், இதய நோய்கள் வராமல் தடுக்கும்
நாம் தொடர்ச்சியாக சைக்கிள் மிதித்து வந்தால், அது நம் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து எல்லா உறுப்புக்களையும் ஒழுங்குபடுத்துகிறது. அதோடு மட்டுமல்லாமல், இதயத் தசைகளை வலுப்படுத்தி ரத்த அழுத்தம்,இதய நோய்கள் போன்றவற்றிலிருந்து நம்மைக் காக்கிறது.
சர்க்கரைநோய் வராமல் தடுக்கிறது
இப்போதுள்ள காலகட்டத்தில் எல்லோருக்கும் உடல் உழைப்பு என்பது இல்லாமல் போய விட்டது.. அதனால் இளம் வயதிலேயே சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றது.
ஆனால் தினமும் அரைமணி நேரம் சைக்கிள் மிதிப்பவர்களுக்கு, மற்றவர்களைவிட சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு 40% குறைவாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மன அழுத்தத்தைக் குறைக்க
சைக்கிள் மிதிப்பதால் நம்முடலில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுவதால், நம்மை மனக் அழுத்தத்திலிருந்து விடுவிக்க உதவுகிறது..
கேன்சரைத் தடுக்க
தினமும் சைக்கிள் மிதிப்பவர்களுக்கு, மற்றவர்களைவிட கேன்சர் வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. குறிப்பாக சைக்கிள் மிதிக்கும் போது நம்முடலில் உள்ள தசைகள் அனைத்தும் நன்றாக செயல்படுவதால், மலக்குடல் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்களாம்.
அதனால் எல்லோரும் தினமும் சைக்கிள் மிதிப்போம். வீட்டில் சைக்கிள் இல்லையென்றால் கவலை வேண்டாம், இப்போது எல்லா ஜிம்களிரும் சைக்கிளிங் மிஷின் உள்ளது.. அதனால்
எல்லோரும் தங்கள் பிள்ளைகளுடன் ஜிம்மிற்கு சென்று இதுதான் சைக்கிள் என்று உங்கள் பிள்ளைகளுக்குக் காண்பித்துவிட்டு, அப்படியே சைக்கிள் மிதித்துவிட்டு வாருங்கள்!