பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் தி.மு.க.வில் இணைந்தார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர், செங்கோட்டையன். இவரது அண்ணன் மகன் செல்வன். இவர் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க செயலாளராக பதவிவகித்து வருகிறார். இந்த நிலையில், இவர் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். பின்னர், அவரது முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அப்போது, தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு உள்பட பலரும் உடனிருந்தனர்.