சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஆயுதப்படை வீரரை, மாவோயிஸ்டுகள் படுகொலை செய்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவதுடன், காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். அரசு சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கின்றனர். மாவோயிஸ்டுகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் பல ராணுவ வீரர்கள் இதை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில், பிஜப்பூர் மாவட்டம் பட்டேடா கிராமத்தில் சத்தீஸ்கர் ஆயுதப்படையைச் சேர்ந்த ஒரு வீரர் கடந்த 7 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இதனால் அனைவரும் கொதித்து போய் இருக்கின்றனர்.
அவர்களை மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் இன்று கிடைத்துள்ளது. ஆயுதப்படை வீரரை மாவோயிஸ்டுகள் கொலை செய்து அவரது உடலை கங்காலூர்-பிஜப்பூர் சாலையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அவரின் உடலை பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.




