இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடைவிதிக்க பட்டதால் இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக மஞ்சள் இலங்கைக்கு இறக்குமதி. அதில் பலரும் கண்டுபிடிக்கபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை. உள்நாட்டு மஞ்சள் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக மஜால் இறக்குமதி அங்கு தடி செய்யப்பட்டுள்ளது. மஞ்சள் இறக்குமதிக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டதை அடுத்து, இலங்கையில் மஞ்சள் பாவனை முழுமையாக தடைப்பட்டது. அவர்களுக்கு பெரும்பாலான மஞ்சள் இறக்குமதி இந்தியாவிலிருந்து தான் நடந்திருக்கின்றது.
மஞ்சளுக்கான இறக்குமதி தடையான நிலையில், உள்நாட்டு சந்தையில் மஞ்சளுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது. மஞ்சளுக்கு பதிலாக, கோதுமை மா மற்றும் மஞ்சள் நிற நிறப்பூச்சிகளை பயன்படுத்தி போலி மஞ்சள் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படுவதை நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்திருந்தனர்.
இந்த போலி மஞ்சள் மக்களுக்கு அதிருப்தி அளித்ததால். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் மஞ்சள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதனை அறிந்த அரசு சோதனை நடத்தையில் சுமார் 1338 கிலோகிராம் மஞ்சளை கடந்த இரு தினங்களில் இருவேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினர் கைப்பற்றினர். மேலும் சிலாபம் பகுதியில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த முயற்சித்த 1000 கிலோகிராம் மஞ்சள் தொகையை கடற்படையினர் இன்று கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து சோதனை சூடு பிடித்ததால் 510 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டதுடன், அந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். மன்னார் கரையோர பகுதியில் 308 கிலோகிராம் எடையுடைய மஞ்சள் பொதிகள் ஐந்தை கடற்படையினர் கைப்பற்றினர். மேலும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த 520 கிலோகிராம் மஞ்சள் பொதிகளுடன் மூன்று சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.