பெங்களூருக்கு எதிரான ஐ.பி.எல்.ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது..
பெங்களூருக்கு எதிரான ஐ.பி.எல்.ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங் செய்ய களத்தில் தொடக்க ஆட்டக்காரர்களாக புது முக வீரர் பட்டிகல்,ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் உள் புகுந்தனர்.புது முக வீரர் பட்டிகல் சந்தீப் சர்மா வீசிய 2 வது ஓவரில் 2 பௌண்டரி அடித்து அசத்தினார்.தொடர்ந்து அதிரடி காட்டிய பட்டிகல் தமிழக வீரர் நடராஜன் வீசிய 4 வது ஓவரிலும் 3 பௌண்டரிகளை தெறிக்க விட்டார்.இருவரும் நிதானத்தை வெளிப்படுத்தி விளையாட அணியின் எண்ணிக்கை 5.2 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது. அதிரடி காட்டிய பட்டிகல் 10 வது ஓவரில் அணியின் எண்ணிக்கை 83 ஆக இருக்க அவரது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.அதன் பிறகு தமிழக வீரர் விஜய் சங்கர் வீசிய 11 வது ஓவரில் பட்டிகல் கிளீன் போல்ட் ஆக 42 பந்துகளில் 56 ரன்களுடன் வெளியேறினார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பின்ச் அடுத்த ஓவரே அபிசேக் சர்மா கைகளில் lbw முறையில் அவுட் ஆனார்.பெங்களூர் அணி 13 வது ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை கடக்க.களத்தில் கேப்டன் கோலியும்,டிவிலியர்ஸும் நின்றனர்.கேப்டன் விராட் கோலி 13 பந்துகளில் 14 ரன் எடுத்து நடராஜன் வீசிய 16 வது ஓவரில் ரஷித் கான் கைகளில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
மறுமுனையில் நிலைத்து ஆடிய டிவிலியர்ஸ் அவ்வப்போது பௌண்டரிகளை தட்டிவிட பெங்களூர் அணி 18 வது ஓவரில் 140 ரன்களை கடந்தது.சந்தீப் சர்மா வீசிய 19 வது ஓவரில்டிவிலியர்ஸ் 2 சிக்ஸர் அடிக்க 150 ரன்களை அதிரடியாய் கடந்தது.புவனேஸ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் 4 ரன்கள் அடித்து இரண்டாவது பந்தில் 2 ரன்கள் ஓடி டிவிலியர்ஸ் அரை சதம் அடித்து அவுட் ஆனார்.பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் துபே ரன் அவுட் ஆகி 163 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து ஹைதராபாத் அணிக்கு 164 ரன்களை இலக்காக கொடுத்தது.அதிகபட்சமாக பட்டிகல் 56,டிவிலியர்ஸ் 51 ரன்கள் எடுத்து இருந்தனர்..