புதிய கல்விக்கொள்கை குறித்து நாளை இணையம் மூலமாக கருத்துக்கேட்பு நடைபெற உள்ளது.

சென்னை:
புதிய கல்விக்கொள்கை:
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை சார்பில் தனித்தனியாகக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதற்காக உயர் கல்வித்துறை சார்பில் அத்துறையின் செயலர் அபூர்வா தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழு தமிழக அரசின் கீழ் செயல்படும் 15 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் நேற்று விரிவாக ஆலோசனை நடத்தியது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
நாளை கருத்துக்கேட்பு :
இதன்படி 15 பல்கலைக்கழகங்கள் சார்பில் தலா 20 முதல் 25 பேர் புதிய கல்விக் கொள்கை குறித்துத் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம். பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் இதில் பங்கேற்கலாம். நாளை காலை 9.30 முதல் 4 மணி முதல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களில் இணையம் மூலம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து பொது மக்களிடமும் கருத்துகள் பெறப்பட்டு, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை உயர் கல்வித்துறை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




