மறைந்த பாடகர் எஸ்.பி.பி மருத்துவமனைக்கு செல்லும் முன்பாக தனது காதல் மனைவியிடம், கண்ணீர்மல்க பேசிய உருக்கமான பேச்சு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாடகரான எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் 51 நாட்களாக மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, சென்னை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு, மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாக, தனது காதல் மனைவி சாவித்ரியிடம் எஸ்.பி.பி கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக சாவித்ரியுடன் வாழ்ந்த எஸ்பி பாலசுப்ரமணியம் ஒரு முறைக்கூட தனது மனைவியிடம் சண்டை போட்டது கிடையாது எனக் கூறப்படுகிறது.
மருத்துவமனைக்கு செல்லும் முன்பாக, உன்னை விட்டு பிரிந்து எப்படி இருக்க போகிறேனோ என மனைவியிடம் கண்ணீர் மல்க எஸ்.பி.பி கூறியிருக்கிறார். அதோடு நான் திரும்பி வருவேனோ, வராமல் போய்விடுவேனோ தெரியவில்லை. நான் மீண்டு வராவிட்டால் எந்த சூழ்நிலையிலும் நீ உடைந்து போய்விடக்கூடாது எனவும், தனக்கு பிறகு நீதான் இந்த குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் என்று கூறியதைக் கேட்டு அவரது மனைவியும் கதறி அழுதுள்ளார்.
மருத்துவமனைக்கு வந்த பிறகும் தனது மனைவியுடன் தினமும் வீடியோ காலில் பேசி வந்துள்ளதோடு, மருத்துவமனையில் இருந்தபடியே தனது 51வது திருமண நாளையும் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.