கொரோனாவால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை (செப்.,28) வீடு திரும்பவுள்ளதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தேமுதிகாவின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நிலை குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோன என்று பலரும் வதந்திகளை பரப்பி வந்தனர். ஆனால் அவருக்கு கொரோன இல்லை என்று தகவல் வந்தது. அதன் பிறகும் அவர் மருத்துவமனையில் இருந்து வருகிறார்.
விஜயகாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்புவார் என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். இதனால், தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




