வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்களை சுத்திகரித்து பயன்படுத்துவது அவசியம் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தி கூறி உள்ளனர்.
கொரோன வைரஸ் இதனை தடுக்கவோ சரிசையவோ இன்னும் மருந்துகள் கண்டு பிடிக்காத நிலையில். இந்த நோய் தொடற்று பரவிய காலங்களில் இருந்தே மாஸ்க் மற்றும் சனிட்டிஸிர் மட்டும் தான் இதனை தடுக்கும் கருவிகளாக கருதப்படுகிறது. இதனாலே மாஸ்க் விற்பனை மிகவும் அதிகரித்து வந்தது.
இதனால் சிலர் மாஸ்குகளை வீட்டிலே தயாரித்து பயன்படுத்த தொடங்கின்றனர். இதுபோன்ற மாஸ்க் அனைத்துமே துணியால் செய்தது தான். இதனை reuse செய்து கொள்ளலாம் ஆதலால் இது பெரும் வரவேற்பை பெற்றது. இவற்றின் தரத்தை தெரிந்துகொள்ளும் விதமாக அறுவை சிகிச்சை முக கவசம், இரு வகை என்-95 முக கவசங்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட காகித முக கவசம், வீட்டில் தயாரிக்கப்பட்ட பருத்தி முக கவசம் அணிந்த தன்னார்வலர்களிடம் துகள்களின் ஓட்டத்தை அளவிடுவதற்கான சோதனைகள் நடத்தி உள்ளனர்.
இதனில் முடிவில் கண்டறியப்பட்டது யாதெனில் மருத்துவ தர அறுவை சிகிச்சை முக கவசங்கள், என்-95 முக கவசங்கள் பேசும்போதும், இருமும்போதும் வெளிப்படும் வான்வழி துகள்களை 90 சதவீதம் தடுத்தது தெரிய வந்தது. எனவே இவற்றை அணிவது நல்லது. அதே நேரத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட பருத்தியிலான முக கவசங்களின் துணியிலிருந்து சிறிய அளவிலான இழைகள் (துகள்களாக) வெளியே விடுவிக்கப்பட்டு வந்தன. இதனால், அந்த முக கவசங்களே துகள்களை வெளியிடுவதால், அவை காற்றில் வெளியேற்றப்பட்ட துகள்களை தடுத்தனவா என்று சொல்வது கடினம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இருப்பினும் அவற்றை தோய்த்து மீண்டும் நன்றாக உபயோகப்படுத்துவது நல்லது என கூறபடுகிறது.