இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தின் கதை திருடப்பட்டதாக தமிழ்நாடன் உயர்நீதிமன்றத்தில் எதிர்மனுதாக்கல்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தின் கதை திருடப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தை எட்டியுள்ளது.
இந்திய சினிமாவில் உள்ள முன்னணி இயக்குநர்களின் ஒருவர் ஷங்கர். இவரது பிரமாண்ட படங்களுக்காக உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அவரது எந்திரன் படக் கதை சம்பந்தமாக பிரச்சனை இருந்துவந்த நிலையில் தற்போது இந்தக் கதை திருட்டு விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது.
தமிழ் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் இந்த வழக்கைத்தொடர்ந்துள்ளார். அதில்,தான் வார இதழில் எழுதிய ஜூகிபா என்கிற தொடர்கதையை திருடித்தான் சினிமாவுக்கு ஏற்ற திரைக்கதை, காட்சியமைப்பு, பாடல்கள் சேர்த்து படமெடுத்து பலகோடி சம்பாந்தித்துள்ளனர்.
எனவே அப்படத்தின் தயாரிப்பாளர் தனக்கு ரூ.1 கோடி இழப்பீடு தரவேண்டுமெனக் கேட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.
இதுதள்ளுபடி செய்யப்பட்டது. இதையெதிர்த்து தமிழ்நாடன் உயர்நீதிமன்றத்தில் ஷங்கர் தனது கதையைத் திருடி படம் எடுத்ததாக் கூறி எதிர்மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் காண பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.