மதுரையில் பெற்றோர்களின் அலட்சியத்தால் சூடான பால் அண்டாவில் விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேலமடை எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவர் பல ஆண்டுகளாக பால் வியாபாரம் செய்து வருகிறார். வழக்கமாக தன்னுடைய வியாபாரத்தினை முடித்து விட்டு, மீதமுள்ள பாலினை தயிராக்குவதற்காக, பெரிய அண்டாவில் பாலினை காய்ச்சி வைத்திருக்கிறார். இந்நிலையில் அவருடைய இரண்டு வயது குழந்தை பார்த்தசாரதி அங்கே விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அண்டாவில் விழுந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உடனடியாக படுகாயத்துடன் இருந்த குழந்தையினை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்ழதை உயிரிழந்து விட்டது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் காவல்நிலையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் பெற்றோர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.